பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (27-10-2021) நடைபெற்ற 16-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் காணோலி வாயிலாக பங்கேற்றார். கிழக்கு ஆசியா உச்சி மாநாடு மற்றும் ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் புருனே நாடு 16-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டை நடத்தியது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான். தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசியான் நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பங்கேற்பு நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியா முக்கியப் பங்குதாரராக இருந்தது. இது, பிரதமர் பங்கேற்கும் 7-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாடாகும்.

மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முன்னனி தலைவர்கள் தலைமையிலான அமைப்பாக திகழும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். தடுப்பூசிகள் மற்றும் இதர மருந்து பொருட்கள் விநியோகம் மூலம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டினார். பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் புத்தெழுச்சியை உறுதி செய்வதில், “தற்சார்பு இந்தியா” இயக்கம் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றங்களை தாக்குபிடிக்கக்கூடிய வாழ்க்கை முறைக்கும் இடையே  சீரான தன்மையை ஏற்படுத்துவதன் அவசியம் குறத்தும் அவர் வலியுறுத்தினார்.

இந்தோ-பசிபிக், தென் சீனக்கடல், UNCLOS, பயங்கரவாதம் மற்றும் கொரிய தீபகற்பம் மற்றும் மியான்மர் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு, பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்தும், 16-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் “ஆசியானை மையப்படுத்திய” தன்மையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தோ-பசிபிக் பற்றிய ஆசியான் அமைப்பின் கண்ணோட்டத்திற்கும் இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிக்கும் இடையேயான ஒற்றுமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

மனநல ஆரோக்கியம், சுற்றுலா மற்றும் நீடித்த மீட்சி வாயிலாக பொருளாதார மீட்சி தொடர்பாக, இந்தியாவும் இணைந்து முன் மொழிந்த மூன்று அறிக்கைகளை கிழக்காசிய உச்சி மாநாட்டின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒட்டுமொத்தமாக இந்த மாநட்டில், பிரதமர் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிற தலைவர்களுக்கும் இடையே, பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.  

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%

Media Coverage

India's Q3 GDP grows at 8.4%; FY24 growth pegged at 7.6%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 1, 2024
March 01, 2024

Indian Economic Growth Sustainable, Stable and Exponential under the Leadership of Prime Minister Modi