PM Modi recalled the fruitful visit by the Nepalese PM last year
Nepal remains a special partner in India’s Neighbourhood First policy

நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பிரதமர் பிரசண்டா வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா-நேபாள உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் பிரசண்டாவின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். கடந்த ஆண்டு நேபாள பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்த திரு மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய, நட்பு மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுடன் ஆழமான வேரூன்றிய கலாச்சார மற்றும் நாகரிக தொடர்புகளை நேபாளம் பகிர்ந்து கொள்வதாகவும், மேலும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற  கொள்கையில்  நேபாளம் சிறப்பு கூட்டாளியாக உள்ளது என்றும் நேபாள பிரதமர் தெரிவித்தார். இந்தத் தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்தைத் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India unveils 20 major maritime reforms to cut logistics costs and boost global trade presence

Media Coverage

India unveils 20 major maritime reforms to cut logistics costs and boost global trade presence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 9, 2026
April 09, 2026

Self-Reliant India Rising: Record Investments, 3rd in Renewables & Affordable Skies Under PM Modi