உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, அனைத்து குடிமக்களும் கவனத்துடன் உணவுப் பழக்கங்களை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டாவின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"கவனத்துடன் உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அழைப்புடன் #உலக கல்லீரல் தினத்தைக் கொண்டாடுவது பாராட்டுக்குரிய முயற்சியாகும். எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை ஒருங்கிணைந்து ஏற்படுத்துவதன் மூலம் உடல் தகுதி மிக்க, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம். #StopObesity”
Commendable effort to mark #WorldLiverDay with a call for mindful eating and healthier living. Small steps like reducing oil intake can make a big difference. Together, let’s build a fitter, healthier India by raising awareness about obesity. #StopObesity https://t.co/CNnlonFHhW
— Narendra Modi (@narendramodi) April 19, 2025


