பகிர்ந்து
 
Comments
வதோதரா-வில் குஜராத் கவுரவ திட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்
ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 1.4லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்படுகிறது
ரூ.16,000 கோடி-க்கும் மேல் மதிப்புள்ள திட்டங்கள் வாயிலாக, இந்த பிராந்தியத்தின் ரயில் போக்குவரத்துக்கு பெரும் ஊக்கம்
சாமான்ய மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்
இம்மாநிலத்தில், மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட உள்ளன
பவகத் மலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலையும் பிரதமர் திறந்துவைக்க உள்ளார்

பிரதமர் திரு.நரேந்திரமோடி, ஜுன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.  18-ந் தேதி காலை 9:15மணியளவில், பவகத் மலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை திறந்து வைக்கும் பிரதமர், அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் விராசத் வேனுக்குச் செல்கிறார். அதன்பிறகு, பகல் 12:30 மணியளவில், வதோதரா-வில் குஜராத் கவுரவ திட்டத விழாவில் பங்கேற்கும் பிரதமர், ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  

குஜராத் கவுரவ திட்டம்

வதோதராவில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவு திட்ட விழாவில், அரசின் பல்வேறு திட்டப் பயணாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்.  ரூ.16,000 கோடி-க்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர், புதிய ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். பிரத்தியேக சரக்கு ரயில் தடத்தில், புதிய பாலான்பூர் – மடார் இடையிலான 357 கி.மீ. தொலைவு ரயில்பாதை,  அகமதாபாத் – போடாட் இடையிலான 166கி.மீ அகலப்பாதை, மின்மயமாக்கப்பட்ட 81கி.மீ தூரமுள்ள பாலான்பூர் – மிதா பிரிவை நாட்டிற்கு அர்ப்பணித்தல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.   சூரத், உத்னா, சோம்நாத் மற்றும் சபர்மதி ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர், ரயில்வே துறையின் பிற திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.   இந்தத் திட்டங்கள், சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைக்க உதவுவதுடன், இப்பகுதியில் தொழில்துறை மற்றும் வேளாண் துறைக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.   அத்துடன்,  இந்த பிராந்தியத்தின் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்ககான வசதிகளையும் அதிகரிக்கச் செய்யும்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 1.38லட்சம் வீடுகளையும் பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். இதில்,  நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட ரூ.1,800கோடி மதிப்பிலான வீடுகளும், கிராமப்புறங்களில் ரூ.1,350கோடிக்கும் மேல் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளும் அடங்கும். இதுதவிர, ரூ.310கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட சுமார் 3,000 வீடுகளும் திறந்து வைக்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியின்போது, கேடா, ஆனந்த், வதோதரா, சோட்டா உதேபூர் மற்றும் பஞ்ச்மஹால் பகுதிகளில் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் நோக்கில், ரூ.680கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

குஜராத்தின் தபோய் தாலுகாவிற்குட்பட்ட குந்தேலா கிராமத்தில், குஜராத் மத்திய பல்கலைகழகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.  வதோதரா நகரிலிருந்து 20கி.மீ. தொலைவில் சுமார் ரூ.425கோடிசெலவில் கட்டப்படும் இந்த பல்கலைகழகம், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வித் தேவையை பூர்த்தி செய்யும்.  

மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.800 கோடி மதிப்பிலான “முதலமைச்சரின் தாய்மைத் திட்டத்தை” பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.   இத்திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, அங்கன்வாடி மையங்களில் மாதந்தோறும் 2கிலோ கொண்டைக்கடலை, ஒரு கிலோ துவரம்பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.   “ஊட்டச்சத்து திட்டத்திற்கான” சுமார் ரூ.120கோடியையும் பிரதமர் விடுவிக்க உள்ளார்.  இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியின பயனாளிகள் அனைவருக்கும் நீட்டிக்கப்டுகிறது.   பழங்குடியின மாவட்டங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, சோதனை அடிப்படையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகள் வழங்கி, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, தற்போது மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது. 

ஸ்ரீ காளிகா மாதா கோவிலில் பிரதமர்

பவகத் மலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் திறந்துவைக்க உள்ளார். இப்பகுதியில் உள்ள மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான இக்கோவில், பக்தர்கள் பெருமளவில் வந்து செல்லும் தலமாகம்.   இக்கோவிலை புணரமைக்கும் பணி 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்டமாக புணரமைக்கப்பட்ட திட்டங்களை, இந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் தொடங்கிவைத்தார். தற்போது திறந்து வைக்கப்பட உள்ள இரண்டாம் கட்ட புணரமைப்புத் திட்டங்களுக்கு, 2017-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். கோவிலின் அடிவார விரிவாக்கம் மற்றும் மூன்றடுக்கு வளாகம், தெருவிளக்கு மற்றும் சிசிடிவி பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், இரண்டாம் கட்டத்தில் அடங்கும்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Why 10-year-old Avika Rao thought 'Ajoba' PM Modi was the

Media Coverage

Why 10-year-old Avika Rao thought 'Ajoba' PM Modi was the "coolest" person
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM praises float-on - float-off operation of Chennai Port
March 28, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has praised float-on - float-off operation of Chennai Port which is a record and is being seen an achievement to celebrate how a ship has been transported to another country.

Replying to a tweet by Union Minister of State, Shri Shantanu Thakur, the Prime Minister tweeted :

"Great news for our ports and shipping sector."