கதை சொல்லல், சமூக மாற்ற ஆலோசனை ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் முயற்சியாக விருது இருக்கும்
விருது மகத்தான பொது ஈடுபாட்டைக் கண்டது; 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின
இருபது பிரிவுகளில் விருது வழங்கப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணியளவில் புதுதில்லி பாரத மண்டபத்தில் முதல் தேசிய படைப்பாளர்கள் விருதை வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றுவார்.

 

தேசிய படைப்பாளிகள் விருது என்பது கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த விருது கருதப்படுகிறது.

 

தேசிய படைப்பாளர் விருது முன்மாதிரியான பொது ஈடுபாட்டைக் கண்டுள்ளது. முதல் சுற்றில், 20 வெவ்வேறு பிரிவுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு சுற்றில், பல்வேறு விருது பிரிவுகளில் டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வை இந்த விருது உண்மையிலேயே பிரதிபலிக்கிறது என்பதற்கு இந்த அபரிமிதமான பொது ஈடுபாடு சான்றாகும்.

 

சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படும்; ஆண்டின் பிரபல படைப்பாளி; பசுமை சாம்பியன் விருது; சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி; மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி; ஆண்டின் கலாச்சார தூதர்; சர்வதேச படைப்பாளி விருது; சிறந்த பயண படைப்பாளி விருது; தூய்மை தூதர் விருது; நியூ இந்தியா சாம்பியன் விருது; டெக் கிரியேட்டர் விருது; ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது; மிகவும் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் & பெண்); உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி; சிறந்த மைக்ரோ கிரியேட்டர்; சிறந்த நானோ படைப்பாளி; சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity

Media Coverage

From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 27, 2026
June 27, 2026

Appreciation for PM Modi's Development-Focused and People-Centric Governance