'சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கத்தை' பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

'சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்'' என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும்செயலூக்கம் நிறைந்த சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் மூலமும் ஊட்டச்சத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இளம் மனங்களை ஈடுபடுத்துவதற்கும்இந்த நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும்தேசத்திற்கு தைரியம்அர்ப்பணிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மைகவ்மைபாரத் இணையதளங்கள் மூலம் வினாடி வினாக்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான இணையதளப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள்குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள்அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் கதை சொல்லுதல்படைப்பாற்றல்எழுத்து போன்ற சுவாரஸ்யமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பிரதமரின் தேசிய சிறுவர் விருது பெற்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
ISRO Successfully Tests CE20 Cryogenic Engine At Uprated 220 KN Thrust For C32 Stage Of Upcoming LVM3 Mission

Media Coverage

ISRO Successfully Tests CE20 Cryogenic Engine At Uprated 220 KN Thrust For C32 Stage Of Upcoming LVM3 Mission
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 11, 2026
September 11, 2026

Seva Pakhwada to Superpower Status: Why Citizens Are Hailing PM Modi’s Relentless Push