பகிர்ந்து
 
Comments

பாரத் ட்ரோன் மஹோத்சவம் 2022 என்ற இந்தியாவின் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை மே 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார்.

கிசான் ட்ரோன் விமான ஓட்டிகளுடன் கலந்துரையாடும் பிரதமர்,வானத்தில் ட்ரோன்களின் சாகசங்களைந் பார்வையிடுவதுடன், ட்ரோன் கண்காட்சி மையத்தில் புதிய நிறுவன பிரதிநிதிகளுடனும் உரையாடுவார்.

பாரத் ட்ரோன் மஹோத்சவம் 2022 என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி, மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப் படை வீரர்கள், மத்திய ஆயுதப் படை வீரர்கள், பொதுத்துறை நிறுவனப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனத்தினர், மற்றும் ட்ரோன் புதிய நிறுவனத்தினர் உள்ளிட்ட 1600 பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்கள். கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டோர் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாடுகளைக் காட்சிப்படுத்துவார்கள். இந்த மஹோத்சவத்தில் ட்ரோன் விமான ஓட்டிகளுக்கான உரிமங்கள் காணொலி வாயிலாக வழங்கப்படுவதுடன், பொருட்களின் அறிமுகம், குழு விவாதம், ட்ரோன்களின் செயல்விளக்கம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி மாதிரியின் காட்சிப்படுத்தல் முதலியவையும் இடம்பெறும்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
'Ambitious... resilient': What World Bank experts said on Indian economy

Media Coverage

'Ambitious... resilient': What World Bank experts said on Indian economy
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 7, 2022
December 07, 2022
பகிர்ந்து
 
Comments

Citizens Rejoice as UPI Transactions see 650% rise at Semi-urban and Rural Stores Signalling a Rising, Digital India

Appreciation for Development in the New India Under PM Modi’s Visionary Leadership