தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முதலாம் ஆண்டைக் குறிக்கும் வகையில் பலதரப்பு முக்கிய முன்முயற்சிகளை பிரதமர் அறிமுகப்படுத்துகிறார்
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் இலக்குகளை அடைவதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக முன்முயற்சிகள் விளங்குகின்றன

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஓராண்டு நிறைவு செய்வதைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கை தயாரிப்பாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 29, 2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுவார். கல்வித்துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்துவார்.

உயர் கல்வியில் மாணவர்கள் நுழைவதற்கும் வெளி வருவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குவது, முதலாமாண்டு பொறியியல் திட்டங்கள் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுவது, உயர் கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் போன்றவற்றிற்கு வழிவகை செய்யும் அகாடமிக் கிரெடிட்  வங்கியை பிரதமர் தொடங்கி வைப்பார்.

வித்யா பிரவேஷ் என்ற முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டின் அடிப்படையில் பள்ளிக்குத் தயாராகும் தொகுதி; இடைநிலை அளவில் இந்திய சைகை மொழியை ஒரு பிரிவாக அறிமுகப்படுத்துவது; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட நிஷ்தா 2.0 என்ற ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம்; சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு திட்டமான சஃபல் (கற்றல் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பு மதிப்பீடு); செயற்கை நுண்ணறிவுக்கென பிரத்தியேகமான இணையதளம் உள்ளிட்ட முன்முயற்சிகளும் தொடங்கப்படும்.

மேலும், தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் ஆகியவையும் இந்த நிகழ்வின்போது அறிமுகப்படுத்தப்படும்.

தேசிய கல்விக்கொள்கை 2020-இன் இலக்குகளை அடைவதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இந்த முன்முயற்சிகள் குறிப்பதோடு, கல்வித் துறையை மேலும் துடிப்பானதாகவும், அணுகும் வகையிலும் இந்த முயற்சிகள் மாற்றும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை கட்டமைக்கவும், கல்வியை முழுமையானதாக மாற்றவும், கற்றலின் நிலையை மாற்றவும் தேசிய கல்விக் கொள்கை 2020, வழிகாட்டும் தத்துவமாக விளங்குகிறது.

21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமையும்.  அணுகுதல், சமவாய்ப்பு, தரம், குறைந்த கட்டணம் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அடித்தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை,  2030-க்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப உருவாக்கப்பட்டிருப்பதுடன்,  இந்தியாவை வலிமையான அறிவாற்றல்மிக்க சமுதாயம் மற்றும் உலகளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்குடன்,  பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை மேலும் முழுமையான, நெகிழுந்தன்மையுடைய, பலதரப்பட்டதாக,  21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைப்பதுடன், ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

மத்திய கல்வி அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Two-wheeler exports seen rising up to 20% as Africa demand recovers: Ind-Ra

Media Coverage

Two-wheeler exports seen rising up to 20% as Africa demand recovers: Ind-Ra
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 19, 2026
August 19, 2026

Defence to Diamonds: How PM Modi’s Vision Turned India into a Global Capability Hub