கத்தார் மன்னர் திரு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்தியா, கத்தாருக்கு ஆதரவளிப்பதாகவும், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அப்போது பிரதமர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவசியத்தை தலைவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.
இந்த சவாலான நேரத்தில் கத்தாரில் உள்ள இந்திய மக்களுக்கு கத்தார் அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் உதவிக்காக பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
"எனது சகோதரரான கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் பேசினேன். நாங்கள் கத்தாருக்கு ஆதரவளிப்பதுடன், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம். இந்த சவாலான நேரத்தில் கத்தாரில் உள்ள இந்திய சமூக மக்களுக்கு அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் உதவிக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
@TamimBinHamad”
Spoke with my brother, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar. We stand firmly in solidarity with Qatar and strongly condemn any violation of its sovereignty and territorial integrity. We emphasized the urgent need to restore peace and stability in the region…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026
تحدثتُ مع أخي، صاحب السمو الشيخ تميم بن حمد آل ثاني، أمير دولة قطر. نقف صفاً واحداً متضامنين مع قطر، وندين بشدة أي انتهاك لسيادتها ووحدة أراضيها. شددنا على الحاجة المُلحة لاستعادة السلام والاستقرار في المنطقة عبر الحوار والدبلوماسية. كما أعربتُ عن تقديري لدعمه المتواصل واهتمامه…
— Narendra Modi (@narendramodi) March 3, 2026


