இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களின் விளைவாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்
இந்தக் கடினமான தருணத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் துணை நிற்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்தை இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது என்பதைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
இஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்திற்கும் பிரதமர் நேதன்யாகு பிரதமரிடம் உறுதியளித்தார்

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக  இருப்பதாகத் தெரிவித்தார்.

 

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது  உறுதிபட தெரிவித்தார்.

 

இஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். அதற்குப் பிரதமர் நேதன்யாகு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பதாக உறுதியளித்தார்.

 

இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 29, 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts