நான் பூட்டானில் 2025 நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன்.
பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.
பூட்டானின் மன்னர், 4-ம் மன்னர் மற்றும் பிரதமர் ஷெரின்ங் டோப்கே ஆகியோரை சந்திப்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன். எனது பயணம் நமது நட்புறவை மேலும் வலுப்படுத்தி பகிரப்பட்ட வளர்ச்சி மற்றும் வளமையையொட்டிய நமது முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவும், பூட்டானும் சிறந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு, ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் நற்பெயரை கொண்டுள்ளன. நமது கூட்டாண்மை அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமையின் முக்கியத்தூணாகவும், அண்டை நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவுக்கான மாதிரியாகவும் திகழ்கிறது.
Leaving for Bhutan, where I will attend various programmes. This visit comes at a time when Bhutan is marking the 70th birthday of His Majesty the Fourth King. I will be holding talks with His Majesty the King of Bhutan, His Majesty the Fourth King and Prime Minister Tshering…
— Narendra Modi (@narendramodi) November 11, 2025


