ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள கூட்டமைப்பு போட்டியில், நான்கு வெவ்வேறு நிகழ்வுகளில் நான்கு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன: பிரதமர் மோடி
என் அன்பு நாட்டு மக்களே, தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. சுட்டெரிக்கும் வெயில், வெப்பக் காற்று, இதுபோன்ற காலநிலையில் உங்களை நீங்களே கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்: பிரதமர் மோடி
பீகார், ஜார்க்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கிடைக்கும் சத்து ஷர்பத் மிகவும் அற்புதமானது – அது வயிற்றை நிரப்பி, உடலுக்கு வலிமையைத் தருகிறது: பிரதமர் மோடி
சேவைக்கு பெரும் வளங்கள் தேவையில்லை - தேவைப்படுவது ஒரு நல்ல எண்ணமும் தொடர்ச்சியான முயற்சியுமே: பிரதமர் மோடி
நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், சோழர் காலத்தைச் சேர்ந்த பழங்கால செப்புத் தகடுகள் இந்தியாவிற்குத் திருப்பி அளிக்கப்பட்டன: பிரதமர் மோடி
வானியல் நம் நாட்டில் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அது ஆய்வுப் பயணங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது; இன்றைய இளைஞர்களிடம் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது: பிரதமர் மோடி
டால்பின் மீட்பு ஆம்புலன்ஸ் ஒரு நடமாடும் மருத்துவமனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் டால்பினைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன: பிரதமர் மோடி
நண்பர்களே, நாம் கங்கை டால்பினைக் காப்பாற்றும்போது, ஒரு இனத்தை மட்டும் காப்பாற்றுவதில்லை; கங்கையின் பல்லுயிர்ப் பெருக்கத்தையே காப்பாற்றுகிறோம்: பிரதமர் மோடி
கிரிஜா அம்மாஜியின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது. 'மன் கீ பாத்' (மனதின் குரல்) மூலம் உத்வேகம் பெற்ற அவர், நாட்டில் உள்ள பல வீரர்களுக்குப் பங்களிப்பதாக உறுதியளித்தார்: பிரதமர் மோடி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.  தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது.  இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன்.  சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன.  இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன.  குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள்.  நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

நண்பர்களே, ஒரு நிகழ்ச்சியானது நாடெங்கிலும் பெரும் விவாதப் பொருளாகிறது என்றால் அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்.  வெறும் இரண்டே நாட்களுக்கு உள்ளாக ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலே தேசிய சாதனை மூன்று முறை தகர்க்கப்பட்டது.  இதை சாதித்துக் காட்டிய இரண்டு வீரர்கள் என்றால் அவர்கள் தாம் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோர். இந்த முறை மனதின் குரலில் இந்த இரு விளையாட்டு வீரர்களோடும் உரையாடிப் பார்ப்போமே என்று நான் நினைத்தேன். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 29, 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi