பகிர்ந்து
 
Comments
Situation in Karnataka and Tamil Nadu, as fallout of the issue of distribution of the waters of the Cauvery River, is distressful: PM
Violence cannot provide a solution to any problem. In a democracy, solutions are found through restraint and mutual dialogue: PM
Violence and arson seen in the last two days is causing loss to the poor, and to our nation’s property: PM Modi
I appeal to the people of Karnataka and Tamil Nadu, to display sensitivity, and also keep in mind their civic responsibilities: PM

அன்புச் சகோதர, சகோதரிகளே,

காவிரியாற்றின் நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் பிரச்சினையின் தொடர்ச்சியாக கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனிப்பட்ட வகையில், இந்த நிகழ்ச்சிப்போக்குகளைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எந்தவொரு பிரச்சினைக்குமே வன்முறை தீர்வை வழங்கி விடாது. ஜனநாயகத்தில் பொறுமை மற்றும் பரஸ்பர பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலமாகவே தீர்வுகள் எட்டப்படும்.

இந்த பிரச்சினைக்கு சட்டவரம்புகளுக்கு உட்பட்டே தீர்வு காண முடியும். சட்டத்தை மீறுவதென்பது நடைமுறைக்கேற்ற மாற்றாக இருக்க முடியாது. கடந்த இரண்டு நாட்களாக நாம் கண்டு வரும் வன்முறையும் தீவைப்பும் ஏழைகளுக்கும், நமது நாட்டு சொத்துக்களுக்குமே இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

நமது நாடு மிக மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும்போதெல்லாம், நாடு முழுவதிலும் உள்ள மக்களைப் போலவே, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன்தான் அத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தகையதொரு பொறுப்புணர்வை வெளிப்படுத்துமாறும், அதே நேரத்தில் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையிலான பொறுப்புகளை மனதில் கொள்ளுமாறும் இந்த இரு மாநில மக்களையும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் மேலாக, நமது நாட்டின் நலன்கள், நமது நாட்டை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை நீங்கள் மனதில் கொள்வீர்கள் என்றும், நிதானத்திற்கும் ஒத்திசைவிற்கும் முன்னுரிமை வழங்கி, வன்முறை, சேதப்படுத்துதல், தீவைப்பு ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு, நல்ல தீர்வு காண்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
How Direct Benefit Transfer Became India’s Booster During Pandemic, and Why World Bank is in Awe

Media Coverage

How Direct Benefit Transfer Became India’s Booster During Pandemic, and Why World Bank is in Awe
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 7, 2022
October 07, 2022
பகிர்ந்து
 
Comments

A major push to digital payments in the country. Digital Transactions cross 1 billion-mark

India’s e-commerce industry and manufacturers see tremendous growth in the first week of this year’s festive season