நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அணுகக்கூடிய வகையில் மலிவான விலையில் சுகாதார சேவை வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் மருந்தக மையங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற மாற்றகரமான முன்முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் என்ற முயற்சியின் கீழ் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை அரசு தற்போது எடுத்துள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் டாக்டர் சுமித் ஷாவின் பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“சுகாதார சேவையை இந்தியர்கள் அனைவரும் அணுக வழிவகை செய்வதே எங்கள் தீவிர பணியாக இருந்து வருகிறது.
மக்கள் மருந்தக மையங்கள் முதல் ஆயுஷ்மான் பாரத் வரையும், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு பூஜ்ஜிய வரிகள் உட்பட, அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரிகள் தற்போது குறைக்கப்பட்டிருப்பதன் மூலமும், சுகாதார சேவை, மலிவான விலையில் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்.
#NextGenGST”
Affordable healthcare for every Indian has always been our mission.
— Narendra Modi (@narendramodi) September 4, 2025
From Jan Aushadhi Kendras to Ayushman Bharat, and now with reduced GST on essential health products, including zero tax on 33 life-saving medicines, we continue our journey to make quality healthcare more… https://t.co/7hL5zG3bBs


