மேதகு அதிபர் திரு.லூலா அவர்களே,
இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்டப் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
அதிபர் திரு. லூலா மற்றும் அவரது குழுவினரை இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த ஆண்டு பிரேசிலில் நீங்கள் என்னை எவ்வளவு நட்புறவோடும், விருந்தோம்பலோடும் வரவேற்றீர்களோ, அதே உணர்வுடன் உங்களை இந்தியாவிற்கு நான் மனதார வரவேற்கிறேன். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியா - பிரேசில் இடையிலான உறவுகள், அதிபர் லூலாவின் தொலைநோக்குப்பார்வை மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையால் நீண்டகாலமாகப் பயனடைந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒவ்வொரு சந்திப்பின் போதும், இந்தியா மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த நட்பையும் மாறாத நம்பிக்கையையும் நான் நேரில் உணர்ந்திருக்கிறேன்.

அதிபர் லூலாவின் இந்த வருகை, வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், நமது உத்திசார் கூட்டு செயல்பாடுகளுக்கு புதிய வேகத்தையும் அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அவர் காட்டும் நட்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய எமது ஆலோசனையில், நமது பகிரப்பட்ட நோக்கம் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்.
லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகப் பிரேசில் திகழ்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது இருதரப்பு வர்த்தகத்தை 2,000 கோடி டாலருக்கும் அதிகமாகக் கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது வர்த்தகம் என்பது வெறும் எண்களைப் பொறுத்தது மட்டுமல்ல, அது பரஸ்பர நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். அதிபர் லூலாவுடன் வந்துள்ள மிகப்பெரிய வர்த்தகக் குழுவே இந்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
இந்தியா - மெர்கோசூர் (India-MERCOSUR) வர்த்தக ஒப்பந்தத்தின் விரிவாக்கம், நமது பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையிலான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வளர்ந்து வரும் நாடுகளுக்கும் மிக முக்கியமானது.
பிரேசிலில் டிஜிட்டல் பொதுக் உள்கட்டமைப்பிற்கான ஒரு மேன்மைமிகு மையத்தை நிறுவுவதற்காக நாம் பணியாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு , சூப்பர் கம்ப்யூட்டர்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் பிளாக்செயின் போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கும் நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
"தொழில்நுட்பமானது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், மேலும் அது பொதுவான முன்னேற்றத்திற்கான ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும்" என்பதில் நமது இரு நாடுகளும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளன.
எரிசக்தி ஒத்துழைப்பு நமது கூட்டாண்மையின் வலுவான தூணாக இருந்து வருகிறது. ஹைட்ரோகார்பன்களுடன் இணைந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலப்பு, நிலையான விமான எரிபொருள் மற்றும் பல வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை நாம் மேலும் துரிதப்படுத்தி வருகிறோம். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் பிரேசிலின் தீவிரப் பங்களிப்பானது, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் (சிடிஆர்ஐ) இணைத் தலைவராக இருக்கவும் பிரேசில் முன்மொழிந்துள்ளது. இந்த முன்முயற்சிக்காக அதிபர் திரு. லூலாவை நான் பாராட்டுகிறேன். இந்தத் துறையில் பிரேசிலின் விரிவான அனுபவம் சிடிஆர்ஐ மேலும் வலுப்படுத்துவதற்குப் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
முக்கியமான தாதுக்கள் மற்றும் அரிதான புவித் தனிமங்கள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தமானது, நெகிழ்வான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதை நோக்கி எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
நமது பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பும் சீராக விரிவடைந்து வருகிறது. இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய சீரமைப்பிற்கு ஒரு வலுவான உதாரணமாகத் திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் இந்த பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையை நாம் மேலும் வலுப்படுத்துவோம்.

எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப, வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளில் நமது கூட்டாண்மைக்கு புதிய பரிமாணங்களை வழங்கி வருகிறோம். காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண்மை, துல்லியப் பண்ணை முறை மற்றும் உயிரி உரங்கள் போன்ற துறைகளிலான ஒத்துழைப்பு, நமது இரு நாடுகளின் உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.
எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை முறைக்காகப் பிரேசிலில் ஒரு மேன்மைமிகு மையத்தை நிறுவுவது இந்தத் திசையில் ஒரு முக்கியமான முன்முயற்சியாக அமையும்.
சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு மலிவான மற்றும் தரமான மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்றுவோம். அதே வேளையில், முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரேசிலில் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேலும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நண்பர்களே,
உலக அரங்கில், இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான கூட்டாண்மை வலுவானதாகவும், மிகுந்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது. துடிப்புமிக்க ஜனநாயக நாடுகள் என்ற முறையில், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
"இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்படும் போது, தெற்குலக நாடுகளின் குரல் வலிமையுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் ஒலிக்கிறது."
ஒவ்வொரு சவாலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். பயங்கரவாதமும் அதனை ஆதரிப்பவர்களும் மனிதகுலத்தின் எதிரிகள் என்பதில் இந்தியாவும் பிரேசிலும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. மேலும், தற்போதைய காலத்தின் சவால்களைச் சரியாக எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தம் அவசியம் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தத் திசையில் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
மேதகு அதிபர் அவர்களே,
உங்களது இந்த வருகை நமது உத்திசார் கூட்டு செயல்பாடுகளை மேலும் ஆழப்படுத்தும் என்றும், வரும் ஆண்டுகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைத் திறந்துவிடும் என்றும் நான் நம்புகிறேன்.
உங்களது வருகைக்கும், நீங்கள் கொண்டுள்ள ஆழமான நட்பிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
भारत और ब्राजील के संबंधों को राष्ट्रपति लूला की दूरदृष्टि और प्रेरक नेतृत्व का लंबे समय से लाभ मिलता रहा है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
बीते कुछ वर्षों में मुझे इनसे कई बार मिलने का सौभाग्य मिला है और हर मुलाकात के दौरान मैंने, भारत के प्रति इनकी गहरी मित्रता और विश्वास को महसूस किया है: PM @narendramodi
ब्राज़ील, लैटिन अमेरिका में भारत का सबसे बड़ा trade partner है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
हम आने वाले पाँच वर्षों में द्विपक्षीय व्यापार को 20 बिलियन डॉलर के पार ले जाने के लिए प्रतिबद्ध है।
हमारा व्यापार केवल आंकड़ा नहीं, विश्वास का प्रतिबिंब है: PM @narendramodi
Technology और innovation के क्षेत्र में हमारा सहयोग दोनों देशों के साथ-साथ, पूरे Global South के लिए महत्व रखता है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
मुझे खुशी है कि हम ब्राजील में Digital Public Infrastructure के लिए Centre of Excellence बनाने पर काम कर रहे हैं: PM @narendramodi
Critical Minerals और rare earths में जो समझौता हुआ है, वो resilient supply chains के निर्माण में एक बड़ा कदम है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
Defence के क्षेत्र में भी हमारा सहयोग निरंतर बढ़ रहा है। ये एक-दूसरे के प्रति भरोसे और रणनीतिक तालमेल का बेहतरीन उदाहरण है।
हम इस win-win partnership को आगे भी और…
When India and Brazil work together, the voice of Global South becomes stronger and more confident: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 21, 2026
भारत और ब्राजील एकमत हैं कि आतंकवाद और उसके समर्थक पूरी मानवता के शत्रु हैं।
— PMO India (@PMOIndia) February 21, 2026
हम इस बात पर भी सहमत हैं कि वर्तमान समय की चुनौतियों से निपटने के लिए वैश्विक संस्थानों का reform अत्यंत आवश्यक है: PM @narendramodi


