இந்தியாவின் இலக்கிய மற்றும் கலாச்சார ஆன்மாவை வடிவமைத்ததற்காக குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார் என்று திரு மோடி தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் மனிதநேயத்தை வலியுறுத்துவதுடன், மக்களிடையே தேசியவாத உணர்வைத் தூண்டும் வகையில் இருந்தன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்;
"குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்தியாவின் இலக்கியம் மற்றும் கலாச்சார ஆன்மாவை வடிவமைத்ததற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவரது படைப்புகள் மனிதநேயத்தை வலியுறுத்தும் அதே வேளையில், மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டுவதாகவும் இருந்தன. சாந்திநிகேதன் மூலம் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கல்வி மற்றும் கற்றலுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தன".
Tributes to Gurudev Rabindranath Tagore on his Jayanti. He is fondly remembered for shaping India’s literary and cultural soul. His works emphasised on humanism and at the same time ignited the spirit of nationalism among the people. His efforts towards education and learning,…
— Narendra Modi (@narendramodi) May 9, 2025


