பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து நமது சமூகத்திற்கான வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று அவர் கூறினார். அவர் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பெருமை மற்றும் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி மேலும் கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையும் தொடர்ந்து நமது சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன. அவர் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் பெருமை மற்றும் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். சேவை மற்றும் கருணையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்."
I bow to Swami Vivekananda Ji on his Punya Tithi. His thoughts and vision for our society remains our guiding light. He ignited a sense of pride and confidence in our history and cultural heritage. He also emphasised on walking the path of service and compassion.
— Narendra Modi (@narendramodi) July 4, 2025


