முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காக ராம் விலாஸ் பாஸ்வான் நடத்திய போராட்டத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்று திரு. மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது முழு வாழ்க்கையும் சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்தை ஒருபோதும் மறக்க முடியாது.”
पूर्व केंद्रीय मंत्री रामविलास पासवान जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उनका संपूर्ण जीवन सामाजिक न्याय को समर्पित रहा। दलितों, पिछड़ों और वंचितों के अधिकारों के लिए उनके संघर्ष को कभी भुलाया नहीं जा सकता। pic.twitter.com/SCqIav16He
— Narendra Modi (@narendramodi) July 5, 2025



