பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் சித்தாந்த அடித்தளம் மற்றும் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வழங்கிய ஆழமான பங்களிப்புகளைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவம் மற்றும் வரிசையில் கடைசியாக நிற்கும் ஏழை மக்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது அந்த்யோதயா தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மாதிரிக்கு இன்றும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த கொள்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் தேசத்தைக் கட்டமைப்பதற்கும் அரசின் அணுகுமுறையில் ஆழமாக வேரூன்றி உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பாரத மாதாவின் தலைசிறந்த புதல்வரும் ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் முன்னோடியுமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களுக்கு, அவரது ஜெயந்தியன்று கோடான கோடி வணக்கங்கள். நாட்டிற்கு செழிப்பின் வழியைக் காட்டிய அவரது தேசியவாதச் சிந்தனைகளும், அந்த்யோதயா கொள்கைகளும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்"
भारत माता के महान सपूत और एकात्म मानववाद के प्रणेता पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी जयंती पर कोटिश: नमन। देश को समृद्धि की राह दिखाने वाले उनके राष्ट्रवादी विचार और अंत्योदय के सिद्धांत विकसित भारत के निर्माण में बहुत काम आने वाले हैं। pic.twitter.com/Lrj39Nn7wP
— Narendra Modi (@narendramodi) September 25, 2025





