திரு கே. காமராசரின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் “அரும்பெரும் தலைவரான திரு கே காமராசரின் பிறந்த நாளான இன்று அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது வாழ்க்கையை, தேசவளர்ச்சிக்காகவும், சமூக அதிகாரமயமாக்கலுக்காவும் அர்ப்பணித்தார். கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தியது இந்திய மக்களுக்கு தொடர்ந்து உத்வேகமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Paying homage to the great Shri K. Kamaraj on his birth anniversary. He dedicated his life to national development and social empowerment. His emphasis on education, healthcare and women empowerment continue to inspire the people of India.
— Narendra Modi (@narendramodi) July 15, 2021


