சமூக சீர்திருத்தவாதியான துறவி சேவாலால் மகராஜின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். “உண்மை, அகிம்சை மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களின் செய்தியைப் பரப்புவதன் மூலம், அவர் சமூகத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை என்றென்றும் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும்” என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"சிறந்த சமூக சீர்திருத்தவாதி துறவி சேவாலால் மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு ஏராளமான வணக்கங்கள். உண்மை, அகிம்சை மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களின் செய்தியைப் பரப்புவதன் மூலம், அவர் சமூகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை எப்போதும் நம் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும்.
ஜெய் சேவாலால்!
महान समाज सुधारक श्री संत सेवालाल महाराज को उनकी जयंती पर शत-शत नमन। सत्य, अहिंसा और उच्च नैतिक मूल्यों का संदेश देकर उन्होंने समाज में नवचेतना का संचार किया। उनका प्रेरणादायी जीवन सदैव देशवासियों का मार्गदर्शन करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) February 15, 2026
जय सेवालाल! pic.twitter.com/iOfMvbzqtI


