பகிர்ந்து
 
Comments
கோவின் இணையதளம் அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தரப்படுகிறது: பிரதமர்
200 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொகுப்பாக உள்ளது: பிரதமர்
100 ஆண்டுகளில் இது போன்ற பெருந்தொற்று ஏற்படவில்லை மற்றும் எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இதுபோன்ற சவாலை தனியாக தீர்க்க முடியாது: பிரதமர்
நாம் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும்: பிரதமர்
தடுப்பூசி உத்திக்கு திட்டமிடும்போது, முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை இந்தியா பின்பற்றியது: பிரதமர்
பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம், எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிருபிக்க மக்களுக்கு உதவுகிறது: பிரதமர்
தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது: பிரதமர்
‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும்: பிரதமர்

கொவிட்-19ஐ எதிர்த்து போராட,  உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக  கோவின்  தளத்தை இந்தியா வழங்கியதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 

அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களுக்கு அவரது இரங்கலை தெரிவித்து தனது உரையை பிரதமர் தொடங்கினார். 100 ஆண்டுகளில் இது போன்ற பெருந்தொற்று ஏற்படவில்லை என்றும்,  எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இது போன்ற  சவாலை தனியாக தீர்க்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மனித இனம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம், நாம் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என்பதுதான். சிறந்த முறைகளை நாம் ஒருவருக்கொருவர் கற்று வழிகாட்ட வேண்டும் என பிரதமர் கூறினார்.

நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள்  அனைத்தையும் உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக நடைமுறைகளை கற்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது எனவும் கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மென்பொருள் என்பது வளங்கள்  தடைகள் இல்லாத ஒரு பகுதி என்றார். அதனால்தான் இந்தியா,  தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானவுடன், தனது கோவிட் கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு செயலியை அனைத்து நாடுகளும்   பயன்படுத்தும் விதமாக்கியது. 200 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொகுப்பாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதால், இது நிஜ உலகில் வேகம் மற்றும் அதிக அளவிற்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என உலக பார்வையாளர்களிடம் பிரதமர் கூறினார்.

தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முடிவு செய்ததாகவும் பிரதமர் கூறினார். இது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க உதவுகிறது, தொற்றுக்கு பிந்தைய உலகில் இயல்புநிலையை விரைவுப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம்,  எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிருபிக்க  மக்களுக்குஉதவுகிறது. தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்தை கருத்தில் கொண்டு, கோவின் தளம் பிறநாடுகளும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படுகிறது.  விரைவில், இது எந்த உலக நாடுகளுக்கும் கிடைக்கும்.

இந்த கோவின் தளத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்த இன்றைய மாநாடு முதல் நடவடிக்கை என திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறினார். கோவின் இணையதளம் மூலம், இந்தியா 350 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை போட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு,  ஒரே நாளில் 9 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதை நிருபிக்க எந்த துண்டு சீட்டையும் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அது டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கிறது. 

விருப்பமுள்ள நாடுகளின் உள்நாட்டு தேவைக்கேற்ப இந்த மென்பொருளின் தனிப் பயனாக்கத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.  ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும் என்ற நம்பிக்கையுடன்  பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார். 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India's forex reserves rise $12.8 billion to 6-week high of $572.8 billion

Media Coverage

India's forex reserves rise $12.8 billion to 6-week high of $572.8 billion
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2023
March 24, 2023
பகிர்ந்து
 
Comments

Citizens Shower Their Love and Blessings on PM Modi During his Visit to Varanasi

Modi Government's Result-oriented Approach Fuelling India’s Growth Across Diverse Sectors