பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, மியான்மர் நிர்வாகக் குழுவின் தலைவரான மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.04.2025) சந்தித்தார்.

 

மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிந்தைய நிலைமை குறித்தும், மியான்மருக்கு மனிதாபிமான உதவி, பேரழிவு நிவாரணம், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்குவதற்காக "ஆபரேஷன் பிரம்மா" திட்டத்தின் கீழ் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவின் உதவி சார்ந்த முன்முயற்சிகளுக்கு மியான்மரின் மூத்த ஜெனரல் தமது நன்றியைத் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மருக்கு முதலில் உதவும் நாடு என்ற முறையில் இந்தியா துணை நிற்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் பல பொருள் உதவிகளையும் பிற உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நம்பகத்தன்மை வாய்ந்த தேர்தல்கள் மூலம் மியான்மரில் ஜனநாயக செயல்முறையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார்.  அமைதியான, நிலையான, ஜனநாயக ரீதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை இந்தியா ஆதரிப்பதாகப் பிரதமர் கூறினார். மியான்மரில் நடந்து வரும் இனக்கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனித இழப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மோதலுக்கு ராணுவ ரீதியான தீர்வு இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன், நீடித்த அமைதியை, அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்றும் கூறினார்.

 

மியான்மர்-தாய்லாந்து எல்லையில்  இணைய மோசடிகளில் இருந்து இந்தியப் பிரஜைகளை மீட்டு திருப்பி அனுப்ப மியான்மர் அளித்த ஆதரவை பிரதமர் பாராட்டினார். இந்தியா-மியான்மர் எல்லையில் தீவிரவாத நடவடிக்கைகள், நாடுகடந்த குற்றங்கள், மனித கடத்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதில் ஒத்துழைத்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

 

மியான்மரில் இந்தியா உதவியுடன் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். மியான்மரில் உள்ள அனைத்து சமூகங்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார்.

 

Met Senior General Min Aung Hlaing of Myanmar on the sidelines of the BIMSTEC Summit in Bangkok. Once again expressed condolences on the loss of lives and damage of property in the wake of the recent earthquake. India is doing whatever is possible to assist our sisters and… pic.twitter.com/Hwwv4VxSpi

— Narendra Modi (@narendramodi) April 4, 2025

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi at BRICS summit: Dismantle ‘pyramid of privilege’ to make Global South a ‘rule-shaper’

Media Coverage

PM Modi at BRICS summit: Dismantle ‘pyramid of privilege’ to make Global South a ‘rule-shaper’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on the Parkash Purab of Sri Guru Granth Sahib Ji
September 12, 2026

The Prime Minister, Shri Narendra Modi, extended greetings on the occasion of the Parkash Purab of Sri Guru Granth Sahib Ji.

The Prime Minister said that for centuries, Sri Guru Granth Sahib Ji has shown humanity the way of selfless service, human dignity and togetherness.

Shri Modi expressed hope that the sacred occasion would inspire everyone to deepen these values in society and build a more compassionate and harmonious world.

The Prime Minister wrote on X;

“Greetings on the Parkash Purab of Sri Guru Granth Sahib Ji.

For centuries, it has shown humanity the way of selfless service, human dignity and togetherness.

May this sacred occasion inspire us to deepen these values in our society and build a more compassionate and harmonious world.”