பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.
மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய மேற்கொண்ட முயற்சிகளுக்காக அதிபர் திரு ட்ரம்பிற்கு, பிரதமர் திரு மோடி பாராட்டுத் தெரிவித்தார். தடையற்ற கப்பல் பயணம், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் தடையற்ற வர்த்தக பயணம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாஷிங்டனில் 2025 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தங்களுடைய சந்திப்பிற்குப் பிறகு, இந்தியா – அமெரிக்கா இடையேயான ராணுவ கூட்டாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பத்தை துரிதப்படுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு, உத்திசார் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, இருதரப்பு வர்த்தகம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய வளர்ச்சிகளுக்கு அவர்கள் வரவேற்புத் தெரிவித்தனர்.
இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தையொட்டிய பேச்சுக்களில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்து சமநிலையான, பரஸ்பரம் நலன் அளிக்கக் கூடிய வர்த்தக ரீதியாக உரிய ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களுடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அடுத்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதிலும் இரு நாடுகள், மக்கள் பரஸ்பரம் பயன் பெறுவதற்கான அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமர் திரு மோடியும், அதிபர் திரு ட்ரம்பும் தங்களுடைய அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிபடுத்தினார்கள்.

Pleased to meet President Trump in Evian. We reviewed the sustained progress in our bilateral cooperation in trade, energy, defence, technology and people-to-people ties.
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
Conveyed India’s appreciation on the progress in the efforts for restoring peace and stability in West… pic.twitter.com/hEUfr5TOJx