கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"அதிபர் திரு. லீ ஜே-மியுங்கும் நானும் கனடாவில் மிக ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தினோம். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் இதர துறைகளிலும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன."
President Mr. Lee Jae-myung and I had a very good meeting in Canada. India and the Republic of Korea seek to work together in sectors like commerce, investment, technology, green hydrogen, shipbuilding and more. @Jaemyung_Lee pic.twitter.com/rh4JiEIabE
— Narendra Modi (@narendramodi) June 17, 2025


