செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று 7, லோக் கல்யாண் மார்கில் (எல்.கே.எம்.-ல்) சந்தித்தார்.
பிரக்ஞானந்தாவின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"இன்று 7, லோக் கல்யாண் மார்கில் (எல்.கே.எம்-ல்) மிகவும் சிறப்புப் பார்வையாளர்கள் இருந்தனர்.
உங்கள் குடும்பத்தினருடன் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. @rpragchess.
ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் உதாரணம் இந்திய இளைஞர்கள் எந்தக் களத்தையும் எவ்வாறு வெல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!"
Had very special visitors at 7, LKM today.
— Narendra Modi (@narendramodi) August 31, 2023
Delighted to meet you, @rpragchess along with your family.
You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph


