மணிப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதலமைச்சர் திரு.என்.பீரேன் சிங் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திக்கு பதிலளித்துள்ள பிரதமர்;
“வாழ்த்துகள் மணிப்பூர்! மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறந்த பணியை தொடர்ந்து பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Well done Manipur! Keep up the good work of leveraging the strength of the MSME sector in order to further the state’s progress. https://t.co/qHYAygCQ2c
— Narendra Modi (@narendramodi) October 30, 2021


