பகிர்ந்து
 
Comments
370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளதால் ஆகஸ்ட் 5ம் தேதி குறிப்பிடத்தக்க தேதியாக மாறியிருக்கிறது : பிரதமர்
இன்று நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பெருமையை நிலைநாட்டியதில் நமது இளைஞர்கள் மிகப் பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர்: பிரதமர்
நமது இளைஞர்கள் வெற்றி இலக்கை அடைந்து வருகின்றனர் அதேநேரத்தில் சிலர் அரசியல் சுயநலத்துக்காக, சுய கோல் அடிக்கின்றனர்: பிரதமர்
இளைஞர்களும், இந்தியாவும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்ற உறுதியான நம்பிக்கை இந்திய இளைஞர்களிடம் உள்ளது: பிரதமர்
சுயநலம் மற்றும் தேச விரோத அரசியலுக்கான இடமாக இந்த சிறந்த நாடு மாற முடியாது: பிரதமர்
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் விரைவாக அமல்படுத்தப்படுவதை இரட்டை இன்ஜின் அரசு உறுதி செய்துள்ளது: பிரதமர்
உத்தரப் பிரதேசம் எப்போதும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி என்ஜினின், சக்தியாக மாற முடியும் என்ற உத்தரப்பிரதேசத்தின் நம்பிக்கை, சமீபத்திய காலங்களில் உருவெடுத்துள்ளது: பிரதமர்
உத்தரப் பிரதேசம் எப்போதும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி என்ஜினின், சக்தியாக மாற முடியும் என்ற உத்தரப்பிரதேசத்தின் நம்பிக்கை, சமீபத்திய காலங்களில் உருவெடுத்துள்ளது: பிரதமர்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆகஸ்ட் 5ம் தேதி, இந்தியாவுக்கு மிகச் சிறப்பான நாளாக மாறியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆகஸ்ட் 5ம் தேதி அன்றுதான், 370வது சட்டப்பிரிவு அகற்றப்பட்டு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வு வலுப்படுத்தப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான உரிமை மற்றும் வசதிகள் கிடைத்தன. 100 ஆண்டுகளுக்குபிறகு, பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் முதல் நடவடிக்கையை இந்தியர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி எடுத்தனர். அயோத்தியில் இன்று ராமர் கோயில் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. 

இந்தநாளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து கூறிய பிரதமர், ஒலிம்பிக் மைதானத்தில் இந்தியாவின் எழுச்சிமிக்க இளைஞர்கள் ஹாக்கியின் பெருமையை மீண்டும் நிலை நாட்டியதன் மூலம்  இன்று ஏற்பட்ட உற்சாகத்தை குறிப்பிட்டார்.

ஒருபுறம் நாட்டின் இளைஞர்கள் இந்தியாவுக்காக புதிய சாதனைகள் படைக்கின்றனர், மறுபுறம், சிலர் அரசியல் சுயநலத்துக்காக சுய  கோல் அடிக்கின்றனர் என பிரதமர் வேதனையுடன் கூறினார். நாடு என்ன விரும்புகிறது, நாடு என்ன சாதிக்கிறது, இந்த நாடு எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இது போன்ற சுயநலத்துக்கும், தேசவிரோத அரசியலுக்கும் இடமாக இந்த சிறந்த நாடு மாற முடியாது என பிரதமர் கூறினார். நாட்டின் வளர்ச்சியை தடுக்க இது போன்றவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இந்த நாடு அவர்கள் பின்னால் செல்லப்போவதில்லை. ஒவ்வொரு சிக்கலையும் எதிர்கொண்டு, ஒவ்வொரு விஷயத்திலும் நாடு வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என அவர் கூறினார். 

இந்த புதிய உணர்வை படம்பிடித்துக் காட்ட, இந்தியர்களின் சமீபத்திய சாதனைகள் பலவற்றை பிரதமர் எடுத்துக் கூறினார்.  ஒலிம்பிக் தவிர, அடையபோகும் 50 கோடி தடுப்பூசி இலக்கு, ஜூலை மாதத்தில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் கோடி என்ற சாதனை ஜிஎஸ்டி வசூல் ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் புதிய உந்துதலை காட்டுகிறது என திரு நரேந்திர மோடி கூறினார்.

மாதாந்திர வேளாண் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவில் ரூ.2 லட்சத்து 62 கோடியாக அதிகரித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சுதந்திர இந்தியாவின் மிக அதிக அளவான இது, வேளாண் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இடம் பிடிக்கவைத்துள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ராந்த்தின் சோதனை ஓட்டம், லடாக்கில் அமைக்கப்பட்ட உலகின் மிகஉயரமான சாலை, இ-ருபி தொடக்கம் ஆகியவை குறித்தும் பிரதமர் பேசினார். 

தங்கள் பதவியை பற்றி மட்டுமே கவலைப்படும் சிலரால், தற்போது இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது என எதிர்கட்சியினரை பிரதமர் விமர்சித்தார்.

புதிய இந்தியா, பதவிகளை வெல்லாமல்,  பதக்கங்களை வென்று, உலகை ஆள்கிறது, புதிய இந்தியாவில் உள்ள முன்னேற்ற பாதை, குடும்ப பெயரால் தீர்மானிக்கப்படாது, கடின உழைப்பால் தீர்மானிக்கப்படும். இந்திய இளைஞர்களும், இந்தியாவும் முன்னேறுகின்றனர் என்ற உறுதியான நம்பிக்கை இந்திய இளைஞர்களிடம் உள்ளது.

பெருந்தொற்று குறித்து பேசிய பிரதமர், கடந்த காலங்களில் மிகப் பெரிய நெருக்கடியை நாடு சந்தித்தபோது, நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இன்று இந்தியாவில், ஒவ்வொரு இந்தியரும் தொற்றை எதிர்த்து முழுவீச்சுடன் போராடுகின்றனர்.  இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடியை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பிரதமர் விரிவாக பேசினார். மருத்துவ உள்கட்டமைப்பு அதிகரிப்பு, உலகின் மிகப் பெரிய இலவச தடுப்பூசி திட்டம்,  நலிந்த பிரிவினர் இடையே பட்டினியை எதிர்த்து போராடும் பிரச்சாரம் போன்ற திட்டங்களில் லட்சக்கணக்கான  கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன.  

பெருந்தொற்றுக்கு இடையே உள்கட்டமைப்பு தயாரிப்புகள் நிற்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலை, விரைவு சாலை திட்டங்கள், பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் ஆகியவைதான் இவற்றுக்கு உதாரணம். 

ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கான திட்டங்கள் விரைவாக அமல்படுத்தப்படுவதை இரட்டை இன்ஜின் அரசு உறுதி செய்துள்ளது என பிரதமர் கூறினார். இதற்கு சிறந்த உதாரணம் பிரதமரின் ஸ்வாநிதி திட்டம். பெருந்தொற்றின் போது, நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் விவரித்தார். பயனுள்ள யுக்தி, உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது, விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் கிடைக்க பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, விவசாயிகள் உற்பத்தியில் சாதனை படைத்தனர். அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை கொள்முதலில் சாதனை படைத்தது. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலில் சாதனை படைத்ததற்காக உத்தரப் பிரதேச முதல்வரை அவர் பாராட்டினார்.  கடந்தாண்டில், குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. உத்தரப் பிரதேசத்தில், ரூ.24 கோடிக்கும் அதிகமான தொகை, 13 லட்சம் விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் கழிவறைகளை பெற்றனர், இலவச சமையல் எரிவாயு பெற்றனர், மின் இணைப்பு பெற்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் 27 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்புகளை பெற்றதாக பிரதமர் தெரிவித்தார். 

கடந்த தசாப்தங்களில், உத்தரப் பிரதேசம் எப்போதும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சியில், உத்தரப் பிரதேசம் எவ்வாறு சிறப்பாக பங்காற்ற முடியும் என்பது பற்றி ஆலோசிக்க கூட அனுமதிக்கப்படவில்லை. குறுகிய கண்ணோட்டத்துடன் உத்தரப் பிரதேசத்தை நாம் பார்த்த நிலையை, இரட்டை இன்ஜின் அரசு மாற்றிவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி என்ஜினின் சக்தியாக உத்தரப் பிரதேசத்தால் மாற முடியும் என்ற நம்பிக்கை சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

கடந்த 7 தசாப்தங்களின் குறையை, சரிசெய்யும் தசாப்தமாக, உத்தரபிரதேசத்துக்கு இந்த தசாப்தம் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள், புதல்விகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் போதிய பங்களிப்பு இல்லாமல் இந்த பணியை செய்திருக்க முடியாது. இந்தப் பணி அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அளித்துள்ளது என கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Modi’s Human Touch in Work, Personal Interactions Makes Him The Successful Man He is Today

Media Coverage

Modi’s Human Touch in Work, Personal Interactions Makes Him The Successful Man He is Today
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to inaugurate the Infosys Foundation Vishram Sadan at National Cancer Institute in Jhajjar campus of AIIMS New Delhi on 21st October
October 20, 2021
பகிர்ந்து
 
Comments

Prime Minister Shri Narendra Modi will inaugurate the Infosys Foundation Vishram Sadan at National Cancer Institute (NCI) in Jhajjar Campus of AIIMS New Delhi, on 21st October, 2021 at 10:30 AM via video conferencing, which will be followed by his address on the occasion.

The 806 bedded Vishram Sadan has been constructed by Infosys Foundation, as a part of Corporate Social Responsibility, to provide air conditioned accommodation facilities to the accompanying attendants of the Cancer Patients, who often have to stay in Hospitals for longer duration. It has been constructed by the Foundation at a cost of about Rs 93 crore. It is located in close proximity to the hospital & OPD Blocks of NCI.

Union Health & Family Welfare Minister, Shri Mansukh Mandaviya, Haryana Chief Minister Minister Shri Manohar Lal Khattar and Chairperson of Infosys Foundation, Ms Sudha Murthy, will also be present on the occasion.