பிரதமர் திரு நரேந்திர மோடி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள ரெட் ஹவுஸில் டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸரை சந்தித்தார். சமீபத்திய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தமக்கு அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

விவசாயம், சுகாதாரம், மருந்துகள், டிஜிட்டல் மாற்றம், யுபிஐ, திறன் மேம்பாடு, கலாச்சாரம், விளையாட்டு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல துறைகளில் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிரினிடாட் & டொபாகோ பயணம் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸர் குறிப்பிட்டார்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் போன்றவை குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, இணையதள பாதுகாப்பு போன்ற தற்கால சவால்களைச் சமாளிக்க அதிக ஒத்துழைப்பு தேவை என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்களுக்கு டிரினிடாட் டொபாகோ, இந்தியாவுக்கு அளித்த வலுவான ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மருந்தியல், கலாச்சாரம், விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. டிரினிடாட் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How GST 2.0 changed India’s car market and boosted small car sales

Media Coverage

How GST 2.0 changed India’s car market and boosted small car sales
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 19, 2026
May 19, 2026

Exports Up, Economy Strong, World Collaborating: PM Modi's Reforms Delivering Jobs, Growth & Green Future