பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இரு தலைவர்களும் பரந்த அளவிலான விவாதங்களை நடத்தினர். 2024-ல் இரு நாடுகளுக்கும் இடையே நிறுவப்பட்ட விரிவான புத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பாதுகாப்பு, கடல்சார், தூய்மையான எரிசக்தி, உள்கட்டமைப்பு, புத்தொழில் நிறுவனங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், ஆயுர்வேதம், சுற்றுலா, கலாச்சார இணைப்புகள் போன்ற முன்னுரிமைத் துறைகள் உட்பட இருதரப்பு உறவுகளின் முழு சூழலையும் தலைவர்கள் மதிப்பாய்வு செய்தனர். குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இருதரப்பு டிஜிட்டல் கவுன்சில் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றத்தை தலைவர்கள் பாராட்டினர்.

 

நாடாளுமன்ற, பல்கலைக்கழக பரிமாற்றங்கள் மூலம் இளைஞர் தொடர்புகளை வலுப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இந்த சூழலில், இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி மெட்ராஸ், மலேசியாவின் மேம்பட்ட குறைக்கடத்தி அகாடமி ஆகியவற்றுக்கு இடையேயான தற்போதைய ஒத்துழைப்பை பிரதமர் வரவேற்றார்.

உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு, இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டங்களை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்த கடும் கண்டனத்திற்காக அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்ததோடு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பிற்கும் அழைப்பு விடுத்தார்.

 

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறைக்கடத்திகள், சுகாதாரம், மருத்துவம், பேரிடர் மேலாண்மை, ஊழலை எதிர்த்துப் போராடுதல், ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு, தொழில்நுட்பம், தொழிற்கல்வி, ஐநா அமைதி காக்கும் படைகளில் ஒத்துழைப்பு, மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான இருதரப்பு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. சர்வதேச புலிகள் கூட்டணியில் இணைவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மலேசியா நிறைவு செய்துள்ளது.

10-வது இந்தியா-மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக் கூட்டம் தொடர்பான ஆவணத்தை இரு தரப்பினரும் பெற்றுக்கொண்டனர்.

பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மதிய உணவு விருந்து அளித்தார். மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region

Media Coverage

Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 07, 2026
August 07, 2026

Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch