சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் சுவீடன் பட்டத்து இளவரசி கலந்துகொண்டு 16-வது மன்னர் குஸ்டாஃப் மற்றும் அரசி சில்வியா ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தார். பிரதமர் திரு மோடி மன்னரின் 80-வது பிறந்ததினத்தை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா – சுவீடன் இடையேயான உறவுகளின் முழு அம்சங்களையும் தலைவர்கள் ஆய்வுசெய்து, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுமைக் கண்டுபிடிப்பு, பசுமையை நோக்கிய மாற்றம், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, மின்னணுமயமாக்கல், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், விண்வெளி, ஆராய்ச்சி, கல்வி, கலாச்சாரம், மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளில் வளர்ந்துவரும் சூழலை ஒப்புக்கொண்டனர். பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில், புதுமைக் கண்டுபிடிப்பு, நீடித்த தன்மை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இணைப்புகளால் ஏற்படும் இந்த உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்களுடைய பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். இருதரப்புக்கிடையே விரிவடைந்து வரும் கூட்டாண்மைக்கு வழிகாட்டுவதற்காக, வழக்கமான உயர்மட்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளையும் அமைப்பு ரீதியான உரையாடல்களையும் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

இந்தியா – சுவீடன் இடையேயான நட்புறவை உத்திசார்ந்த கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த உத்திசார்ந்த கூட்டாண்மை நான்கு தூண்களால் வழிகாட்டப்படும். நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான உத்திசார்ந்த உரையாடல், அடுத்த தலைமுறை பொருளாதார கூட்டாண்மை, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நம்பிக்கைமிக்க போக்குவரத்து, எதிர்காலத்தை ஒருங்கிணைந்து வடிவமைத்தல், உத்திசார்ந்த கூட்டாண்மையை செயல்படுத்த, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, பருவநிலை மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான விரிவான வழிவகைகளை அளிக்கும் இந்தியா  - சுவீடன் கூட்டு செயல்திட்டம் 2026 – 2030-ஐ இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அண்மையில் நிறைவடைந்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பொருளாதாரம் வர்த்தகம் ஆகியவற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப இணைப்புகளை வலுப்படுத்துவதற்கு இதை விரைவில் அமல்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

புதுமைக் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட உத்திசார்ந்த துறைகளில் இந்தியாவுடன் சுவீடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

டிஜிட்டல் மாற்றம். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு கிறிஸ்டர்சன் பாராட்டு தெரிவித்தார்.

சுவீடனின் பொருளாதாரம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு சூழலுக்கு இந்தியா வம்சாவளியினரின் நேர்மறையான பங்களிப்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ந்துவரும் துறைகளில் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மேலும் பங்கேற்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
103 Cr Internet Connections, 66 Cr Daily UPI Transactions: PM Modi Highlights Digital India Impact At 11

Media Coverage

103 Cr Internet Connections, 66 Cr Daily UPI Transactions: PM Modi Highlights Digital India Impact At 11
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 1, 2026
July 01, 2026

PM Modi's Vision: Driving Digital Empowerment, Inclusive Development and India's Global Rise