பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான  தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளடக்கியிருந்தன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி ஆகிய முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளையும் அவர்கள் விவாதித்தனர். சமீபத்தில் முடிவடைந்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாடு மற்றும் வரும் 2026-ம் ஆண்டு  இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக இருப்பதை முன்னிட்டு, இந்தக் கூட்டாண்மையானது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் இது தொடர்பாக 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தின் அறிக்கையையும் வரவேற்றனர்.

சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் நடந்து வரும் ஒத்துழைப்பில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் மக்ரோனும் திருப்தி தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் மற்றும் உலகளாவிய மன்றங்கள் மற்றும் முன்முயற்சிகளில் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அவர்கள் உறுதியளித்தனர்.

இந்தோ-பிரான்ஸ் உறவுகளுக்கான முன்னோக்கி செல்லும் வழியை கோடிட்டுக் காட்டும் ஒரு கூட்டு அறிக்கை பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சிவில் அணுசக்தி, முக்கோண ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் பத்து முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.

மர்சேய் அருகே உள்ள கடலோர நகரமான காசிஸில் பிரதமரைக் கௌரவிக்கும் வகையில் அதிபர் மக்ரோன் இரவு விருந்து வழங்கினார். அதிபர் மக்ரோனை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைத்தார்.

ஏற்பட்ட பலன்களின் பட்டியல்: பிரதமரின் பிரான்ஸ் வருகை (10-12 பிப்ரவரி 2025)  

வ.எண்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ ஒப்பந்தங்கள்/ திருத்தங்கள்

பகுதிகள்

1.

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த இந்தியா-பிரான்ஸ் பிரகடனம்

தொழில்நுட்பம் & புத்தாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்

2.

இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026-க்கான இலச்சினை வெளியீடு

தொழில்நுட்பம் & புத்தாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்

3.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் தானியங்கி தேசிய ஆராய்ச்சி மற்றும் தகவல் நிறுவனம் (INRIA) பிரான்சுக்கு இடையேயான டிஜிட்டல் அறிவியலுக்கான இந்தோ-பிரெஞ்சு மையத்தை நிறுவுவதற்கான விருப்பக் கடிதம்.

தொழில்நுட்பம் & புத்தாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்

4.

பிரெஞ்சு புத்தாக்க தொழில் பாதுகாப்பு நிலையத்தில் 10 இந்திய புத்தொழில் நிறுவனங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம்.

தொழில்நுட்பம் & புத்தாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்

5.

மேம்படுத்தப்பட்ட  நவீன அணு உலைகள் மற்றும் சிறிய நவீன அணு உலைகளை கூட்டாக நிறுவுவதற்கான விருப்பப் பிரகடனம்

சிவில் அணுசக்தி

6.

இந்திய அணுசக்தித் துறை மற்றும் பிரான்சின் பிரெஞ்சு அணுசக்தி மற்றும் மாற்று எரிசக்தி  ஆணையம் இடையேயான உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையத்துடன் (ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்.

சிவில் அணுசக்தி

7.

 இந்தியாவின்  உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையம், பிரான்சின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவின் அணுசக்தித்துறை மற்றும் பிரான்சின் அணுசக்தி மற்றும் மாற்று எரிசக்தி  ஆணையம் இடையேயான ஒப்பந்தத்தை செயல்படுத்துதல்.

சிவில் அணுசக்தி

8.

மூன்று கூட்டாண்மை மேம்பாட்டு ஒத்துழைப்பில் விருப்ப இணைப் பிரகடனம் 

இந்தோ-பசிபிக்/நீடித்தமேம்பாடு

9.

மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை கூட்டாக திறந்துவைத்தல்

கலாச்சாரம்/ மக்களிடேயான தொடர்பு

10.

சுற்றுச்சூழல் மாற்றம், பல்லுயிர் பெருக்கம், வனங்கள், கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான விருப்பப் பிரகடனம்.

சுற்றுச்சூழல்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Hope for productive monsoon session': PM Modi highlights India's gains ahead of Parliament proceedings

Media Coverage

'Hope for productive monsoon session': PM Modi highlights India's gains ahead of Parliament proceedings
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses anguish over the loss of lives due to tunnel collapse in Namchi, Sikkim
July 21, 2026
PM announces ex-gratia from PMNRF

Prime Minister Shri Narendra Modi today expressed anguish over the loss of lives due to the collapse of an under-construction tunnel in Namchi, Sikkim. He extended his deepest condolences to the bereaved families and prayed that those injured recover at the earliest.

The Prime Minister announced that an ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Shri Modi stated that the injured would be given Rs. 50,000.

In a post on X, the Prime Minister shared:

"Anguished by the loss of lives due to the collapse of an under-construction tunnel in Namchi, Sikkim. I extend my deepest condolences to the bereaved families. I pray that those injured recover at the earliest.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi"