நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 11 ஆண்டுகால ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ரயில்வே, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று  பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், குடிமக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், நீண்டகால அடிப்படையில் இது போன்ற நடவடிக்கைகள் தற்சார்பு இந்தியாவிற்கு அடித்தளம் அமைக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:

"கடந்த 11 ஆண்டு காலத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. ரயில்வே முதல் நெடுஞ்சாலைகள் வரை, துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை, நாட்டின் விரைவான வளர்ச்சி கண்டுவரும் உள்கட்டமைப்பு  வசதிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாக உள்ளது.

"நாட்டின் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. நீடித்த தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் தற்சார்பு இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்து வருகிறது!"

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rs 25,000 cr cyber fraud prevented, Rs 323 cr returned to victims as Centre expands e-Zero FIR: Report

Media Coverage

Rs 25,000 cr cyber fraud prevented, Rs 323 cr returned to victims as Centre expands e-Zero FIR: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 11, 2026
July 11, 2026

Record Exports, Record Investments, Record Pride: India’s Rise Under PM Modi is Multi-Dimensional