வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சிப் பாதை சிறந்த முறையில் மேம்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவின் பதிவிற்கு திரு மோடி பதில் அளித்திருப்பதாவது:
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உண்மையில் கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும். மக்களுக்கு வாய்ப்புக்கான புதிய வழிவகைகளையும் வளமைகளையும் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். வடகிழக்குப் பகுதியின் அமைதி, மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது”.
Today a historic agreement was signed between Govt of India, Govt of Nagaland and ENPO resolving decades-long pending issues of Eastern Nagaland. It is a giant step towards realising Modi Ji's vision for a peaceful and prosperous Northeast by resolving all contentious issues. pic.twitter.com/sxt23lBX1n
— Amit Shah (@AmitShah) February 5, 2026


