சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"சிக்கிம் மாநிலமாக மாறிய 50-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்தது!
சிக்கிம் அமைதியான, அழகான, வளமான கலாச்சார மரபுகளையும் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாகும். இந்த மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த அழகான மாநிலத்தின் மக்கள் தொடர்ந்து செழிப்படையட்டும்."
Warm greetings to the people of Sikkim on their Statehood Day! This year, the occasion is even more special as we mark the 50th anniversary of Sikkim’s statehood!
— Narendra Modi (@narendramodi) May 16, 2025
Sikkim is associated with serene beauty, rich cultural traditions and industrious people. It has made strides in…