அருணாச்சலப்பிரதேச மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயற்கைக்கும், பாரம்பரியத்திற்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக அருணாச்சலப்பிரதேச மாநிலம் திகழ்கிறது என்று பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு வலுசேர்ப்பதில் அம்மாநில மக்களின் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய கடின உழைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அருணாச்சலப்பிரதேச மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கம்பீரமான புவிசார் அமைப்புடன் தலைசிறந்த கலாச்சார பன்முகத்தன்மையால் ஆசீர்வதிக்கப்பட்ட அருணாச்சலப்பிரதேசம் பாரம்பரியத்திற்கும், இயற்கைக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அம்மாநில மக்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. அதேசமயம் அம்மாநில மக்களின் பன்முகத்தன்மை கொண்ட பழங்குடியின பாரம்பரிய நெறிமுறைகள் நாட்டிற்கு மகத்தான வளம் சேர்ப்பதாக உள்ளது.

இனிவரும் காலங்களில் அம்மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று புதிய உச்சங்களை அடையட்டும் என்று வாழ்த்துகிறேன்.  

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From strategic partnership upgrade to defence roadmap: Key outcomes of PM Modi–Meloni meeting in Rome

Media Coverage

From strategic partnership upgrade to defence roadmap: Key outcomes of PM Modi–Meloni meeting in Rome
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 21, 2026
May 21, 2026

Appreciation by Citizens on Leadership That Delivers: PM Modi's Journey of Development, Diplomacy & Farmer-First Progress