அயோத்தியில் நடைபெறும் பகவான் ராமர் தர்பாரின் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தெய்வீக ராமர் தர்பாரின் பிராண பிரதிஷ்டை, ராம பக்தர்கள் அனைவரையும் பயபக்தியிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கச் செய்ய போகிறது என்று திரு. மோடி கூறினார்.
மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீ ராமர், நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
"பகவான் ஸ்ரீ ராமரின் பிறப்பிடமான அயோத்தி, மற்றொரு புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கண்டுள்ளது. பிரமாண்டமான மற்றும் தெய்வீக ராமர் தர்பாரின் பிரதிஷ்டையின் இந்த புனிதமான சந்தர்ப்பம், ராம பக்தர்கள் அனைவரையும் பயபக்தியிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கச் செய்ய போகிறது. மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீ ராமர், நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கிட வாழ்த்துகிறேன்.
ஜெய் சியா ராம்!"
प्रभु श्री राम की जन्मस्थली अयोध्या एक और गौरवशाली और ऐतिहासिक क्षण का साक्षी बनी है। भव्य-दिव्य राम दरबार की प्राण-प्रतिष्ठा का ये पावन अवसर समस्त रामभक्तों को श्रद्धा और आनंद से भावविभोर करने वाला है। मेरी कामना है कि मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम सभी देशवासियों को… https://t.co/sbZ4HrJm20
— Narendra Modi (@narendramodi) June 5, 2025


