அட்சய திரிதியையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"அட்சய திரிதியை நன்னாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் புனித பண்டிகை அனைவருக்கும் வெற்றி, செழுமை மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
आप सभी को अक्षय तृतीया की अनंत शुभकामनाएं। मानवता को समर्पित यह पावन पर्व हर किसी के लिए सफलता, संपन्नता और प्रसन्नता लेकर आए, जो विकसित भारत के संकल्प को नई शक्ति प्रदान करे।
— Narendra Modi (@narendramodi) April 30, 2025


