கார்த்திகைப் பெளர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தியக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடைய இந்தத் தெய்வீகத் திருவிழா, அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தைக் கொண்டுவரட்டும். புனித நீராடல், கொடை, ஆரத்தி, வழிபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய நமது புனித பாரம்பரியம் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும்" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கார்த்திகை பூர்ணிமா மற்றும் தேவ் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடைய இந்தத் தெய்வீகத் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தைக் கொண்டுவரட்டும்.. புனித நீராடல், கொடை, ஆரத்தி, வழிபாடு ஆகியவற்றின் புனிதப் பாரம்பரியம் ஆரோக்கியத்தையும் நல்வாய்ப்பையும் கொண்டு வரட்டும். அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும்."
देश के अपने सभी परिवारजनों को कार्तिक पूर्णिमा और देव दीपावली की कोटि-कोटि शुभकामनाएं। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा यह दिव्य अवसर हर किसी के लिए सुख, शांति, आरोग्य और सौभाग्य लेकर आए। पावन स्नान, दान-पुण्य, आरती और पूजन से जुड़ी हमारी यह पवित्र परंपरा सबके जीवन को…
— Narendra Modi (@narendramodi) November 5, 2025


