அமிதாப் பச்சனின் 80-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளை சேர்ந்த ரசிகர்களை தமது நடிப்பால் பரவசப்படுத்தி, மகிழ்வித்த அமிதாப் பச்சன் இந்தியாவின் திரையுலக ஆளுமைகளில் மிகச்சிறந்தவர் என திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“மிகவும் மகிழ்ச்சிமிக்க 80வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிதாப்பச்சன் ஜி. பல தலைமுறைகளை சேர்ந்த ரசிகர்களை தமது நடிப்பால் பரவசப்படுத்தி, மகிழ்வித்த அவர், இந்தியாவின் திரையுலக ஆளுமைகளில் மிகச்சிறந்தவர் ஆவார். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்”.
A very happy 80th birthday to Amitabh Bachchan Ji. He is one of India’s most remarkable film personalities who has enthralled and entertained audiences across generations. May he lead a long and healthy life. @SrBachchan
— Narendra Modi (@narendramodi) October 11, 2022


