வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உலகளாவிய இந்திய சமூகத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையே சக்திவாய்ந்த பாலமாக வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்தியாவுடன் மேலும் நெருக்கமாகக் கொண்டுவர அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தன்று எனது அன்பான வாழ்த்துகள். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கும் உலகிற்கும் இடையே சக்திவாய்ந்த பாலமாகத் தொடர்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் சமூகங்களை வளப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், தங்கள் வேர்களுடன் இணைந்துள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்களை நமது தேசத்தின் தூதர்கள் என்று நான் அடிக்கடி கூறுவேன். அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை உலக அளவில் பிரபலப்படுத்தியுள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்தியாவுடன் மேலும் நெருக்கமாகக் கொண்டுவர எங்கள் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது."
Warm greetings on Pravasi Bharatiya Diwas. The Indian diaspora remains a powerful bridge between India and the world. They have enriched societies wherever they went and, at the same time, stayed connected to their roots. I often say that our diaspora is our Rashtradoots, who…
— Narendra Modi (@narendramodi) January 9, 2026


