மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற வரலாறு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றுள்ள மத்தியப் பிரதேச மாநிலம், இன்று மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்தியப் பிரதேச மாநில மக்களின் திறமையும், கடின உழைப்பும் விலைமதிப்பில்லாத பங்களிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
"புகழ்பெற்ற வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் போற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினமான இன்று, அங்குள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மாநிலம், இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, அம்மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது. இங்குள்ள மக்களின் திறமை மற்றும் கடின உழைப்பு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் தன்னிகரற்றப் பங்களிப்பை வழங்கும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்."
गौरवशाली इतिहास और सांस्कृतिक धरोहर को संजोने वाले मध्य प्रदेश के अपने सभी परिवारजनों को राज्य के स्थापना दिवस की ढेरों शुभकामनाएं। देश के हृदय में बसा हमारा यह प्रदेश जन-जन की आकांक्षाओं को आगे रखकर आज हर क्षेत्र में प्रगति की नई रफ्तार भर रहा है। मुझे विश्वास है कि विकसित भारत…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


