புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புத்தரின் இலட்சியங்களை நனவாக்குவதில் உள்ள அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அவரது சிந்தனைகள் சமூகத்தில் மகிழ்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைதி, கருணை, நல்ல எண்ணம் ஆகியவற்றின் பாதையில் நடக்க உத்வேகம் அளிக்கும் இந்த புனித நாளில், புத்த பெருமானின் வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிப்பதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒரு
சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர், கௌதம புத்தரின் போதனையின்படி, ஒருவர் தனக்குள்ளோ அல்லது வெளி உலகிலோ நிரந்தரமானது என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, எண்வகை நெறிகள், சரியான பார்வை, நல்ல எண்ணம், நல்ல நடத்தை ஆகியவற்றை பின்பற்றும்போது, அவர் துன்பத்திலிருந்து விடுபட்டு உயர்வான அமைதியை அடைகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:
"புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள். புத்த பெருமானின் இலட்சியங்களை நனவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பு மிகவும் வலுவானது. அவரது சிந்தனைகள் நமது சமூகத்தில் மகிழ்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தட்டும்."
Best wishes on Buddha Purnima. Our commitment towards realising the ideals of Lord Buddha is very strong. May his thoughts deepen the spirit of joy and togetherness in our society. pic.twitter.com/pRdmrJaEcN
— Narendra Modi (@narendramodi) May 1, 2026
"सभी देशवासियों को बुद्ध पूर्णिमा की असीम शुभकामनाएं। शांति, करुणा और सद्भावना के मार्ग पर चलने की प्रेरणा देने वाले इस पावन अवसर पर आइए, भगवान बुद्ध के जीवन मूल्यों को अपनाने का संकल्प दोहराएं।
नान्तर्बहिश्च लोकेषु त्वात्मानं दृष्टवान् क्वचित्।
आष्टाङ्गिकेन मार्गेण परमां शान्तिमाययौ॥"
கௌதம புத்தரின் போதனையின் படி, ஒருவர் தனக்குள்ளோ அல்லது வெளி உலகிலோ நிரந்தரமானது என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, எண்வகை நெறிகள், சரியான பார்வை, நல்ல எண்ணம், நல்ல நடத்தை ஆகியவற்றை பின்பற்றும்போது, அவர் துன்பத்திலிருந்து விடுபட்டு உயர்ந்த அமைதியை அடைகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
सभी देशवासियों को बुद्ध पूर्णिमा की असीम शुभकामनाएं। शांति, करुणा और सद्भावना के मार्ग पर चलने की प्रेरणा देने वाले इस पावन अवसर पर आइए, भगवान बुद्ध के जीवन मूल्यों को अपनाने का संकल्प दोहराएं।
— Narendra Modi (@narendramodi) May 1, 2026
नान्तर्बहिश्च लोकेषु त्वात्मानं दृष्टवान् क्वचित्।
आष्टाङ्गिकेन मार्गेण परमां… pic.twitter.com/DrTeabrw93


