அதிகம் பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை வழங்கும் ஆஹார் அனுதான் திட்டத்தில் மாதாந்திர தவணைத் தொகையை வழங்கினார்
ஸ்வாமித்வா திட்ட பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைப் பதிவுகளை (அதிகார் அபிலேக்) வழங்கினார்
பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை வழங்கினார்
ரத்லம் மற்றும் மேக்நகர் ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
சாலை, ரயில், மின்சாரம் மற்றும் குடிநீர் துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.

வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியின சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அரசுத் திட்டப் பலன்களைப் பெற முடியவில்லை. இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

ஆஹார் அனுதன் திட்டத்தின் கீழ் மாதாந்திர தவணைத் தொகையை சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு சத்தான உணவுக்காக மாதத்திற்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.

ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவைப் பிரதமர் வழங்கினார். இது மக்கள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைக்கான ஆவண ஆதாரங்களை வழங்கும்.

மேலும், பிரதமரின் முன்மாதிரி கிராமத் (ஆதர்ஷ் கிராம திட்டம்) திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியைப் பிரதமர் வழங்கியுள்ளார். அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடைகள், சுகாதார மையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள் மற்றும் உட்புற சாலைகள் உள்ளிட்ட  பல்வேறு வகையான கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும்.

ஜபுவாவில் 'முதல்வரின் வளர்ச்சிப் பள்ளி' என்ற பள்ளிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மாணவர்களுக்கு நவீன வகுப்புகள், மின் நூலகம் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த பள்ளி திகழும்.

மத்தியப் பிரதேசத்தில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தார் மற்றும் ரத்லமின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான 'தலவாடா திட்டம்' அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் அடங்கும். புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 14 நகர்ப்புற நீர் வழங்கல் திட்டங்கள், மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற வீடுகளுக்கு பயனளிக்கும். ஜபுவாவின் 50 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான 'நல் ஜல்' திட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

 

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரத்லம் ரயில் நிலையம் மற்றும் மேக்நகர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டியதும் இதில் அடங்கும். இந்த நிலையங்கள் அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படும். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரயில் திட்டங்களில் இந்தூர்-தேவாஸ்-உஜ்ஜைன் சி கேபின் ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக்குதல், பர்கேரா-புத்னி-இடார்சியை இணைக்கும் மூன்றாவது பாதை உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். இந்தத் திட்டங்கள் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கான பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும்.

தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் ஹர்தா-பெதுல்-லில் (தொகுப்பு-1) 30 கிலோ மீட்டர் (ஹர்தா-தேமாகான்) வரை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் உட்பட மத்தியப் பிரதேசத்தில் ரூ. 3,275 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை-752டி-யின் உஜ்ஜைன் தேவாஸ் பிரிவு, இந்தூர்-குஜராத் மத்தியப் பிரதேசத்தின் நான்கு வழி (16 கிலோமீட்டர்) தேசிய நெடுஞ்சாலை 47-ன் எல்லைப் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை-47-ல் சிச்சோலி-பெதுல் (தொகுப்பு-III) ஹர்தா-பெதுல் நான்கு வழிச்சாலை, மற்றும் தேசிய நெடுஞ்சாலை-552ஜி-யின் உஜ்ஜைன் ஜலாவார் பிரிவு ஆகியவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சாலை இணைப்பை மேம்படுத்துவதோடு, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

 

மேலும், கழிவுகள் கொட்டும் பகுதியைச் சீரமைத்தல் மற்றும் மின்சார துணை மின் நிலையம் போன்ற பிற மேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திரு மங்குபாய் சி படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era

Media Coverage

India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of PM’s remarks during inauguration of Swaminarayan Hindu Temple in Paris
September 06, 2026

पूज्य महंत स्वामी, फ्रांस सरकार के सम्मानित प्रतिनिधिगण, उपस्थित अतिथिगण, इंडियन कम्युनिटी के मेरे साथी, देश दुनिया से जुड़े सभी हरि भक्त, देवियों और सज्जनों, जय स्वामीनारायण!

आज फ्रांस की राजधानी पेरिस में भव्य स्वामीनारायण मंदिर का लोकार्पण हो रहा है। यह लोकार्पण भारत और फ्रांस के सांस्कृतिक संबंधों का नया युग स्तंभ है। पूज्य संत जनों और सनातन परंपरा के श्रेष्ठ जनों के आशीर्वाद के साथ आज इस लोकार्पण का मंच ‘वसुधैव कुटुम्बकम’ के भाव का मंच बन गया है। भगवान स्वामीनारायण की कृपा और हमारे संतों का स्नेह, संतों का आशीर्वाद, मेरा सौभाग्य है कि मुझे ऐसे पुण्य अवसरों से जुड़ने का अवसर हमेशा मिलता रहता है। आज भी मैं भले ही पेरिस में आप सबके बीच उपस्थित नहीं हूं, लेकिन मन से और हृदय से, मैं स्वयं को आपके बीच ही अनुभव कर रहा हूं।

साथियों,

आज इस अवसर पर मैं परम पूज्य प्रमुख स्वामी जी महाराज का भी श्रद्धापूर्वक स्मरण करता हूं। प्राचीन काल में भारत का जो सांस्कृतिक आध्यात्मिक वैभव था, उन्होंने उसके पुनर्जागरण का एक अभियान शुरू किया था। आज उसका प्रकाश यूरोप समेत पूरी दुनिया में फैल रहा है। 2024 में अबू धाबी में भव्य मंदिर का लोकार्पण हुआ था। आज वहां हजारों लोग दर्शन करने जाते हैं और अब यहां पेरिस में स्वामीनारायण मंदिर का निर्माण सृजन की यह निरंतरता, यह संतों की संकल्प शक्ति का ही प्रमाण है। मैं पुनीत कार्य के लिए पूज्य महंत स्वामी का आभार प्रकट करता हूं, मैं उनके चरणों में प्रणाम करता हूं। मैं BAPS स्वामीनारायण संस्था को और करोड़ों हरि भक्तों को इस अवसर पर हृदय की गहराई से बधाई देता हूं।

साथियों,

BAPS के माध्यम से जब अलग-अलग देश में मंदिरों की प्राण प्रतिष्ठा होती है, तो वहां भारत के प्राचीन विचार और मानवीय मूल्य भी साथ-साथ ही जाते हैं और भारत का विचार कहता है ‘समानं मनः सह चित्तमेषाम्’ अर्थात हमारे मन समान हो, हमारे हृदय साथ जुड़े। इसलिए आज जब फ्रांस में इतना भव्य मंदिर बनकर तैयार हुआ है, यह फ्रांस की विविधता को तो समृद्ध करेगा ही, इससे भारत और फ्रांस के सांस्कृतिक संबंधों को भी ऊर्जा मिलेगी।

साथियों,

बीते वर्षों में भारत और फ्रांस के संबंध नई ऊंचाइयों तक पहुंचे हैं। मेरे मित्र, प्रेसिडेंट मैक्रों के साथ मिलकर दोनों देश एक Special Global Strategic Partnership बना रहे हैं। Technology, AI और Defence से लेकर Space और Climate Action तक हम एक नई गति और नई ऊर्जा के साथ मिलकर के आगे बढ़ रहे हैं। हम 2026 को India-France Year of Innovation के रूप में भी सेलिब्रेट कर रहे हैं। भारत-फ्रांस की ये Strategic Partnership इसलिए भी खास है, क्योंकि ये हमारे पुराने सांस्कृतिक-राजनैतिक सम्बन्धों की मजबूत बुनियाद पर टिकी है। इतिहास गवाह है, फ्रांस में भारतीय सैनिकों के बलिदान का इतिहास आज भी मन-मंदिर में जीवित है। भाषा से जुड़े विषयों में रुचि रखने वाले लोग यह भी जानते हैं कि फ्रेंच स्कॉलर्स ने संस्कृत को लोकप्रिय बनाने में कितनी अहम भूमिका निभाई है। रामकृष्ण परमहंस और स्वामी विवेकानंद पर रोमाँ रोलाँ की की लेखनी हमारी सोसाइटीज़ को और करीब लाई है। पेरिस से पुडुचेरी के अरबिंदो आश्रम तक 'The mother' की spiritual journey, उसने कितने ही भारतीय और फ्रेंच साधकों को inspire किया है।

साथियों,

दशकों पहले श्रील प्रभुपाद स्वामी भी फ्रांस आए थे। इस्कॉन के जरिए भारत फ्रांस के बीच आध्यात्मिक सम्बन्धों का नया अध्याय उन्होंने शुरू किया था। आज योग भी भारत-फ्रांस के people to people कनेक्ट का एक माध्यम बन चुका है। 'इंटरनेशनल योगा डे' पर एफिल टॉवर के सामने से आने वाली तस्वीरें फ्रांस में योग की लोकप्रियता का उदाहरण बनती हैं और अब BAPS के इस भव्य मंदिर के जरिए, हमारे उन सांस्कृतिक सम्बन्धों में एक नया अध्याय जुड़ रहा है।

साथियों,

इन दिनों, भारत फ्रांस Joint Ventures की संभावनाओं पर बातें होती हैं। स्वामीनारायण मंदिर ने इस संभावना में भी एक नया आयाम जोड़ा है। यह मंदिर 'मेड इन इंडिया' है और 'बिल्ट इन फ्रांस' है। इसके काफी पत्थरों को भारत में तराशा गया है। भारत की प्राचीन प्रतिभा यहाँ फ्रांस में आधुनिक इंजीनियरिंग से आकर जुड़ चुकी है। पेरिस में इस भव्य मंदिर ने आकार लिया है। इसलिए, मैं आशा करता हूँ, यह मंदिर सदियों तक भारत और फ्रांस के बीच सहयोग और संभावनाओं का भी प्रतीक बनकर उभरेगा।

साथियों,

स्वामीनारायण मंदिर हमेशा से भक्ति के साथ-साथ सेवा का माध्यम भी रहे हैं। मुझे बताया गया है, यह मंदिर भी सेवा प्रकल्पों का वैसा ही केंद्र बनेगा। मुझे विश्वास है कि यहाँ से भारतीय संस्कृति के जो स्वर निकलेंगे, उनका लाभ पूरे यूरोप में लोगों को मिलेगा। भविष्य में मुझे जब भी समय मिलेगा, मैं इस मंदिर में दर्शन करने का प्रयास अवश्य करूंगा। इन्हीं शब्दों के साथ, एक बार फिर आज के इस लोकार्पण समारोह में सम्मिलित सभी अतिथिगणों को, सभी परिवारों को, सभी हरि भक्तों को और पूरी Indian Diaspora को मेरी ओर से इस शुभारंभ पर्व की ढेरों शुभकामनाएं!

बहुत-बहुत धन्यवाद!

मर्सी बोकू!

जय स्वामीनारायण!