புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025-ல் வரலாற்று சிறப்புமிக்க வகையில் செயலாற்றிய இந்திய பாரா தடகளக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களை இந்தியா வென்றது. நாட்டின் பாரா விளையாட்டுப் பயணத்தின் புதிய மைல் கல்லாகும். அத்துடன் முதல் முறையாக உலகளாவிய மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வை இந்தியா நடத்தியுள்ளதற்கும் திரு மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
“நமது பாரா தடகள வீரர்களின் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடு!
இந்த ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்திய குழு இதுவரை இல்லாத அளவில் 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்றுள்ளது. நமது தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களுடைய வெற்றி பலருக்கு உத்வேகம் அளிக்கும். நமது குழுவின் ஒவ்வொரு வீரராலும் நான் பெருமைப்படுகிறேன். அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு பெரும் வாழ்த்துகள்.
தில்லியில் இப்போட்டி நடைபெற்றதும் இந்தியாவுக்கான கௌரவமாகும். இந்தப் போட்டியில் பங்கேற்ற சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு பாராட்டுகள்.”
A historic performance by our para-athletes!
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
This year’s World Para-Athletics Championships have been very special. The Indian contingent had its best-ever performance, winning 22 medals, including 6 Gold Medals. Congrats to our athletes. Their success will inspire several… pic.twitter.com/Ivnnq9SLgb


