நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய சுதந்திரக் கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே மற்றும் மூத்த தலைவர் திரு பாலேந்திர ஷா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
நேபாளத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்காக இரு தலைவர்களுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். வரவிருக்கும் புதிய அரசுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், இரு நாட்டு மக்களின் பரஸ்பர வளம், முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்திய-நேபாளம் இடையேயான உறவுகள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், கூட்டு முயற்சிகள் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை வரும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்டும் என்று உறுதி அளித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:
“தேசிய சுதந்திரக் கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்.
அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், தேசிய சுதந்திரக் கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்காகவும் இரு தலைவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். வரவிருக்கும் புதிய அரசிற்கும், இரு நாடுகளின் பரஸ்பர வளம், முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டிருப்பதையும் குறிப்பிட்டேன்.
நமது கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் நேபாள உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.
@hamrorabi
@ShahBalen
@party_swatantra”
Had warm telephone conversations with Mr. Rabi Lamichhane, Chairman of the Rastriya Swatantra Party (RSP) and Mr. Balendra Shah, Senior Leader of the RSP.
— Narendra Modi (@narendramodi) March 9, 2026
Congratulated both leaders on their electoral victories and RSP’s resounding success in the Nepal elections. Conveyed my…
राष्ट्रिय स्वतन्त्र पार्टी (रास्वपा) का सभापति श्री रवि लामिछाने र रास्वपाका वरिष्ठ नेता श्री बालेन्द्र शाहसँग टेलिफोनमा सौहार्दपूर्ण कुराकानी भयो।
— Narendra Modi (@narendramodi) March 9, 2026
वहाँहरुको निर्वाचनमा प्राप्त जित र नेपालको निर्वाचनमा रास्वपाको शानदार सफलताका लागि दुवै नेताहरूलाई बधाई दिएँ। वहाँहरूको आगामी…


