ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மானசி நயனா ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களின் கூட்டு செயல்பாட்டிற்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மகளிர் இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ 5 போட்டியில் அற்புதமான வெள்ளிப் பதக்கம் வென்ற மானசி நயனா ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் (@joshimanasi11 மற்றும் @Thulasimathi11) ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இது சிறந்த கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது!
Congratulations to @joshimanasi11 and @Thulasimathi11 for their splendid Silver win in Women's Doubles SL3-SU5 event. Great teamwork and dedication by them! pic.twitter.com/yBxLd8Fpz6
— Narendra Modi (@narendramodi) October 27, 2023


