இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“நமது விண்வெளித் துறை தொடர்ந்து நமக்கு பெருமை அளிக்கிறது!
இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவிற்கு வாழ்த்துகள்.
நம் விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித் துறை, சிறந்து விளங்குவதற்கும், புதுமைக்கும் அடையாளமாக மாறியிருப்பது, பாராட்டத்தக்கது. அவர்களது வெற்றிகள், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தி, எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன.
@isro”
Our space sector continues to make us proud!
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
Congratulations ISRO on the successful launch of India’s heaviest communication satellite, CMS-03.
Powered by our space scientists, it is commendable how our space sector has become synonymous with excellence and innovation. Their…


