பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இத்தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வியடையாத அணியின் சிறப்பான சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், இது கடின உழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் உறுதிக்கு சிறப்புமிக்க உதாரணம் என்று விவரித்துள்ளார். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பை அளித்த ஒவ்வொரு வீரரும் உண்மையான சாம்பியன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்! இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அவர்கள் உண்மையிலேயே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனையாகும், கடின உழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் உறுதிக்கு சிறப்புமிக்க உதாரணம். ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன்! அவர்களுடைய எதிர்கால முயற்சிக்கு எனது வாழத்துகள். இந்த வெற்றி வருங்காலத் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்.”
Congratulations to Indian Blind Women’s Cricket Team for creating history by winning the inaugural Blind Women’s T20 World Cup! More commendable is the fact that they stayed unbeaten in the series. This is indeed a historic sporting achievement, a shining example of hardwork,… pic.twitter.com/wARpvRRoIm
— Narendra Modi (@narendramodi) November 24, 2025


