அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"டெக்சாஸில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்பு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அமெரிக்க அரசுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
Deeply saddened to learn about loss of lives, especially children in the devastating floods in Texas. Our condolences to the US Government and the bereaved families.
— Narendra Modi (@narendramodi) July 5, 2025


